டிசம்பரில் உள்ளுராட்சி தேர்தல்கள் இடம்பெற வாய்ப்பு!  

Saturday, July 29th, 2017

உள்ளுராட்சி தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாத ஆரம்பத்தில் நடத்தபடலாம் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டங்களின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கூட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது, எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுஅத்துடன், கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: