டிக்ஓயா ஆதார வைத்தியசாலை இன்று மக்களிடம் கையளிப்பு!

இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள டிக்கோயா வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இள்று திறந்து வைக்கப்படவுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.இந்தத் தொகுதி மூன்று மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் 150 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் உள்ளன. இதற்காக செலவிடப்பட்ட தொகை 110 கோடி ரூபாவாகும்.
இந்த வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு அவசர சிகிச்சைப் பிரிவுபிரசவ விடுதி இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள் இரத்த வங்கி உட்பட பல வசதிகள் காணப்படுகின்றன. அத்துடன் உத்தியொகபூர்வ தங்குமிட கட்டிடத் தொகுதிகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
Related posts:
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகளை ஆராய விசேட குழு!
சீனியின் விலை குறைப்பு!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 இலட்சத்துக்கு அதிகமான நோயாளர்கள் சிகிச்சை!
|
|