டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை – சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Sunday, July 25th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறுமியை வேலைக்கு இணைத்துக் கொள்வதற்கு முன்னர் குறித்த வீட்டில் வேலை செய்த 21 மற்றும் 32 வயதுடைய யுவதிகள் இருவரிடம் முன்னர் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

இதுநேரம் கடந்த 21 ஆம் திகதி டயகம பகுதியில் வைத்து குறித்த சிறுமியின் தாய், சிறிய தந்தை, சகோதரன் மற்றும் சகோதரியிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: