டக்ளஸ் தேவானந்தாவை குற்றம் சொல்லவில்லை: இதனை சில புலம்பெயர் தேச தமிழர்தான் அரசியலாக்கினர் – பாடகர் உன்னிக்கிருஷ்ணன்!

Monday, August 14th, 2017

யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உன்னிக்கிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டமைக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணன் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

உன்னிக்கிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி ஒன்று யாழ்ப்பாணம் வெலிங்டன் திரையரங்கு வளாகத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சி காரணங்கள் ஏதும் கூறப்படாது திடீரென இடைநிறுத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே.

குறித்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரே காரணம் என கட்சிக்கு சேறுபூசும் வகையிலும் அவதூறுகளை ஏற்றுடுத்தும் வகையில் புலம்பெயர் தேசத்தில் வாழும் சில விஷமிகள் விஷமப் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.

தமது சுயலாபங்களுக்காகவும் சுயநலன்களுக்காகவும் குறித்த இசை நிகழ்ச்சியை இரத்துச் செய்த புலம்பெயர் தேசத்த விஷமிகள் காரணங்கள் ஏதுமின்றி குறித்த இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரே காரணம் எனக் கூறுவது மிகுந்த வருத்தமளிக்கும் செயலாகும்.

இதுவிடயம் தொடர்பாக கிழக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உன்னிக்கிருஷ்ணன் விளக்கமளிக்கும்போது “எனக்கு அரசியல் குறித்த எதுவும் தெரியாது என்றும் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார் தான் அதை ஏற்றுக்கொண்டேன்” என்றும் தெரிவித்தார்.

பின்னர் இந்தியா சென்றிருந்த நான் இசைக்கச்சேரி ஒன்றுக்காக கனடாவுக்கு சென்றிருந்தேன். அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்ததுடன் அது தொடர்பாக நான் கூறாத விடயத்தை கூறியதாக அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஊடகங்கள் வாயிலாக உண்மைக்குப்புறம்பான செய்தியைப் பிரசாரப்படுத்தியிருந்தனர்.

இதுதான் நடந்த உண்மை. இதனூடாக புலம்பெயர் தமிழர்கள் சிலர் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என்றும் வருத்தம் தெரிவித்தார்.

அத்துடன் டக்ளஸ் தேவானந்தாவைப்பற்றி தெரியாத நான் ஏன் அவரைப்பற்றி குறை சொல்ல வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக பாடகர் உன்னிக்கிஷ்ணன் வருகைதந்திருந்தபோது அவரை வரவேற்றும் வாழ்த்தியும் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: