டக்ளஸ் தேவானந்தாவை அரசியல் தலைவராக கொண்ட மக்கள் பெரும் பேறு பெற்றவர்கள் – தேசிய எழுச்சி மாநாட்டு ஆசியுரைகளில் சமயத் தலைவர்கள் புகழாரம்!

Sunday, May 8th, 2016

தீர்கதரிசனம் மிக்க தமிழ் அரசியல் தலைவர்களுள் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என தேசிய எழுச்சி மாநாட்டில் ஆசியுரை வழங்கிய இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைக்காணமுடியும் என 1987 ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்திவருகின்றார்; டக்ளஸ் தேவானந்தா. அவரை அரசியல் தலைவராக கொண்ட மக்கள் பெரும் பேறு பெற்றவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே அருட்சகோதரர் ராஜ்குமார் அடிகளார் தனது ஆசி உரையில் சமய சமூக விழுமியங்களை கடந்து மக்களுக்காக பணிகளை முன்னெடுத்துவருபவர் டக்ளஸ் தேவானந்தா என தெரிவித்ததுடன் மக்கள் நேசிக்கும் சிறந்த அரசியல்வாதியாகவும் விளங்குபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என தெரிவித்தார்.

தொடர்ந்து இஸ்லாமிய மற்றும் பௌத்த மதங்களின் தலைவர்களும் ஆசியுரை வழங்கியிருந்தனர்.

இதனிடையே நிகழ்வில் ஆசியுரை வழங்கிய சமய தலைவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: