டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தரும்  – தோழர் தவநாதன்!

26853220_1642804532425294_1017359032_o Friday, January 12th, 2018

கடந்தகாலங்களில் எமக்குக் கிடைக்கபெற்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பாக இந்த முட்கொம்பன் கிராமத்தில் கட்சியினூடாக பல பணிகளை முன்னெடுத்துள்ளோம். அவ்வாறே இதுவரையில் நிறைவுசெய்யப்படாதுள்ள ஏனைய பணிகளையும் நாம் முன்னெடுப்பதற்கு மக்கள் எமக்கான ஆணையை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தரவேண்டும் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முட்கொம்பன் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான நடைபெற்ற சந்திப்பில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒரு சிறந்த தலைமையைக் கொண்டுள்ள நாம் மக்கள் பணிகளையே முதன்மையாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றோம். கடந்தகாலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்றிருந்த குறைந்தளவான அரசியல் பலத்தைக்கொண்டு கூட அன்றைய கால அரசுகளுடன் மேற்கொண்ட இணக்க அரசியலினூடாக பல்வேறுபட்ட அபிவிருத்திகளை செயற்படுத்திக் காட்டியுள்ளளோம்.

எனவே இதுபோன்ற பணிகளை நாம் தொடர்ந்தும் செய்வதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலும் தலைமையும் நிச்சயம் பேருதவியாக அமையும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இவ்வாறு மக்களின் வாக்குப் பலத்னினூடான ஆணை எமக்குக் கிடைக்கப்பெறும் பட்சத்தில் இங்கு மேலும் முன்னெடுக்கப்படவேண்டிய பல விடயங்களை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

குறிப்பாக இங்கு பாதை புனரமைப்பு, குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மக்களுக்குக் இருக்கின்றன. நிலையில் அவற்றை முழுமைப்படுத்துவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மக்கள் தமது வாக்குப் பலத்தை வழங்வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!