ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் !

Thursday, May 25th, 2017

சர்ச்சைக்குரிய பொதுபலசேனா அமைப்பின் ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் அனுப்பப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல காரணங்களுக்காக இவ்வாறு கைதுசெய்ய அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காவற்துறையினரால் நீதிமன்றத்தில் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய புதுக்கடை இலக்கம் 4 நீதிவானால் ஞானசார தேரரை நாட்டில் இருந்து வெளியேற தடை விதித்து உத்தரவொன்று வெளியிடப்பட்டுள்ளதாக காவற்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக  ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு தேரருக்கு அறிவித்திருந்த நிலையில் ஞானசார தேரர் முன்னிலையாகாததை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

Related posts:

வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - முல்லைத்தீ...
கொரோனா தொற்றின் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அ...
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு நியமனம் - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அ...