ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் விடுதலை!

Wednesday, January 13th, 2021

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் உள்ளிட்ட 5 பேர் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து 5 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்

இந்நிலையில் இன்று அவர்கள் மீதான கற்றச்சாட்டக்களுக்க சரியான ஆதாரங்கள் இன்மையால் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: