ஜே.வி.பியினருடன் சந்திப்பு – முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் தரப்பினரால் பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படுமா – ஈ.பி.டி.யின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி!
Tuesday, June 4th, 2024தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தமிழரசுக் கட்சி தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டு வரட்டும் என வீறாப்பு பேசிய சுரோஸ் பிரேமச்சந்திரன் தற்போது தமிழரசுக் கட்சியிடம் இரந்து நிற்கின்றார் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன், முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் தரப்பினரால் முன்னெடுக்கப்படும் இந்த பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படும் நிலையும் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தேர்தலை புறக்கணிப்பதும் பொது தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவதும் ஒன்றா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் –
தமிழரசுக் கட்சிக்குள் உட்பூசல் உச்சமடைந்திருந்த சமயத்தில் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக் கட்சி தங்களுக்குள் உள்ள தலைமைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்த பின் தங்களிடம் பேச வரட்டும் என ஏழனமாக கூறிய சுரோஸ் பிரேமச்சந்திரன் தற்போது தமிழரசுக் கட்சி சரியான முடிவை மிக விரைவாக எடுத்து எல்லோருடனும் இணைந்து பயணிப்பதானது தேவையான விடயம் என இரந்து நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
ஆயினும் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்தபின்னர் தமது முடிவை எடுக்கவுள்ளதாக கூறிவருகின்றது. அதேவேளை பொது வேட்பாளர் என்பது ஒரு விஷப் பரீட்சை என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதேபோன்று எதர்வரும் 9 ஆம் திகதி பொது வெளியில் இது தொடர்பாக விவாதிப்பதற்கு அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளது. அதில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதை தெரிந்துகொண்ட சுரேஸ் அணியினர் மிகமிக விரைவாக முடிவெடுக்குமாறு கோரியுள்ளனர்.
ஏனெனில் ஜே.வி.பினர் இப்பொது வேட்பாளர் தொடர்பான தரப்பினரை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இச்சந்திப்பினபோது ஜே.வி.பியினருடன் பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டால் தத்தமது நலன்களுக்காக முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் இவர்கள் பொது வேட்பாளர் விடயம் கைவிட்டுவிடுவார்களா என்றும் அதன்பின்னர் மக்களுக்கு எதை கூறி மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள் என்றும் கேள்வியேழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|