ஜெயலலிதாவின் உடல் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்!

Tuesday, December 6th, 2016

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் போயஸ் கார்டனிலுள்ள வேதா இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் வரை சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த பொதுமக்கள் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்படுகிறது .

மக்கள் கண்ணீரில் வெள்ளத்தில் ஜெயலலிதாவின் உடல் இறுதி அஞ்சலிக்குப் பின்னர், மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

jja

Related posts: