ஜெனீவா குற்றச்சாட்டுக்கான வரைவு பதில் நாளை மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் தினேஷ் குணவர்தன..!

Wednesday, January 27th, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்றையதினம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்து

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் – குறித்த விடயம் தொடர்பில் முழுமையாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவை அனைத்துக்கும் இன்று கையளிக்கப்படவுள்ள ஆவணத்தில் பதிலளிக்கப்படுவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: