ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு பாகிஸ்தான் கூட்டு பதவி நிலை குழுத் தலைவர் வாழ்த்து!

Thursday, April 8th, 2021

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகளில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ராவல்பிண்டியில் அமைந்துள்ள பாகிஸ்தான் கூட்டு பதவிநிலை தலைமையகத்தில் கூட்டு பதவி நிலை குழு தலைமை தலைவர் ஜெனரல் ஜெனரல் நதீம் ரசாவை சந்தித்தார்.

இதன்போது இருதரப்பு தொழில்முறை ஆர்வம், பிராந்திய பாதுகாப்பு நிலைமை, பயிற்சித் திட்டங்களின் பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

ஜெனரல் ஷவேந்திர சில்வா பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தொழில் திறனைப் பாராட்டியதுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தார். எதிர்காலத்திலும் இரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு நீடிக்க வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பாகிஸ்தான் நாட்டின் பதவி நிலை அலுவலகத்துக்கு வருகை தந்த இலங்கை பிரமுகர்களுக்கு முன்னரங்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், சந்திப்பின் நிறைவில் இருநாட்டு இராணுவ பிரதானிகளும் நல்லெண்ணம் மற்றும் புரிதல் அடிப்படையிலான நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.

இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, இராணுவ தலைமையகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் ஜீவந்த குலதுங்க, இலங்கை இராணுவ தளபதியின் இராணுவ உதவியாளர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: