ஜூலை முதல் ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகரித்த கொடுப்பனவு!

Saturday, April 13th, 2019

ஜூலை மாதம் தொடக்கம் ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை வழங்கவுள்ளதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக குறித்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரதேச செயலகங்களுடன் சேர்ந்து புதிய கொடுப்பனவு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையான காலப்பகுதியின் ஓய்வு பெற்ற சகலருக்கும் புதிய கொடுப்பனவு கிடைக்கும் எனவும் இதன்மூலம் ஐந்து இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரை நன்மை பெறுவார்கள் எனவும் ஓய்வுதிய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Related posts: