ஜூலையில் மின் கட்டணத் திருத்தம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

எதிர்வரும் ஜூலை மாதம், மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த முடிவுகளின்படி, செலவு அடிப்படையிலான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும், வருடாந்தம் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதை மறுபரிசீலனை செய்யவும், திருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ...
மின் உற்பத்திக்காக 5,800 மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகம் - பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!
|
|