ஜூலையில் தோன்றுகின்றது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்!

download (1) Monday, July 2nd, 2018

சூரியன் பூமி சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதன் காரணமாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்நிலையில் வருகிற ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.

மேலும்இ கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திர கிரகணம் என்றும் இது 1 மணிநேரம் 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா ஆப்பிரிக்கா ஆசியா அவுஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும். வட அமெரிக்கா ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இது தெரியாது.

ஆசியா அவுஸ்திரேலியா இந்தோனேசியாவில் காலை நேரத்திலும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும்.

இந்த கிரகணம் ஜூலை 27ஆம் திகதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில்இ ரத்த சிவப்பு நிறத்தில் தோன்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


சீரற்ற காலநிலையால் இலங்கையில் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் !
கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்:புதிய அரசியலமைப்பு பேரவை குறித்து டக்ளஸ் தேவானந...
இலங்கை - மாலைத்தீவு நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து ஆராய்வு!
தென் கொரியாவுக்கு ஜனாதிபதி விஜயம்!
வெப்பத்தை கட்டுப்படுத்தும் களஞ்சியசாலை - அமைச்சரவை அங்கீகாரம்!