ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கள் அறிவித்திருந்தது. இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர்,
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஜூன் 30 ஆம் திகதி வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, அரசாங்கம் மற்றும் நிதியமைச்சு இணைந்து இம்மாதம் 30ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடமராட்சியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை –சந்தேகநபர் கைது!
“அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம...
லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோக...
|
|