ஜூன் 15 ஆம் திகதிமுதல் போக்குவரத்துத் துறையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!

ஜூன் 15 ஆம் திகதிமுதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொதுப் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையில் நேற்று இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அன்றாட நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து மற்றும் அலுவலக ரயில் மற்றும் பேருந்து சேவைகள், பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் போன்றவை சில நாட்களுக்குள் மேம்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
000
Related posts:
ஊதியம் உயர்வுகோரும் தனியார் பஸ் ஊழியர்கள்!
மின்சார நிவாரணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!
தொழில் நுட்பத்தை நாம் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் வாழ்க்கை திசைமாறிச் ...
|
|