ஜூன் 01 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி, உற்பத்தி, பாவனைகளுக்கு தடை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
Wednesday, February 15th, 2023பிளாஸ்டிக் இடியப்ப தட்டுக்கள், பிளாஸ்டிக் மாலைகள் உட்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தாரர்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி முதல் பின்வரும் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் பாவனைகள் தடை செய்யப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பானம் உறிஞ்சிகள் (Strow) மற்றும் பிளாஸ்டிக் கிளறிகள், பிளாஸ்டிக் யோகர்ட் கரண்டிகள், தட்டுகள், கோப்பைகள் (யோகட் கப்கள் தவிர), கத்திகள், கரண்டிகள் மற்றும் முட்கரண்டிகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுக்கள் என்பன தடை செய்யப்படுகின்றன.
நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கு அனுமதி கோரி, 2021 ஆகஸ்ட் டல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.இதையடுத்து,ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|