ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் விளையாட்டுத் துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைசச்சர் டலஸ் அழகப்பெரும !

Wednesday, May 27th, 2020

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் விளையாட்டுத்துறை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயால் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் பணிக்கு ஆதரவாக அதிநவீன பி.சி.ஆர் கருவிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்ட 15 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அன்பளிப்பு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், நாட்டின் சுகாதார நிலைமை வழமைக்கு திரும்பிய உடனே பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

பிள்ளைகளின் நலனை பாதுகாக்க தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதாகவும், இதற்காக ஒத்துழைப்பு வழங்கும் தனியார் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

விளையாட்டு துறை மேம்பாட்டிற்காக இதுவரை செயல்படுத்தப்படாத பரிந்துரைகள், பாடசாலைகளுக்குள் விளையாட்டு வீர வீராங்கனைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்கான திட்டங்கள், ஸ்தம்பித்த வளர்ச்சி திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் தேவைப்படும் பல்வேறு விளையாட்டுப் பகுதிகள் ஆகியவற்றை வழங்குவது முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: