ஜூன் மாதத்தில் 16,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Saturday, June 10th, 2023ஜூன் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 16,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ( SLTDA) வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரை 16,559 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் இதுவரை மொத்தம் 4,060 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதேவேளை ரஷ்யாவிலிருந்து 1,789 சுற்றுலாப் பயணிகளையும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,260 சுற்றுலாப் பயணிகளையும், அவுஸ்திரேலியாவிலிருந்து 927 சுற்றுலாப் பயணிகளையும், ஜேர்மனியிலிருந்து 895 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதம் இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர்.
மே மாதத்தில் மொத்தம் 83,309 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA குறிப்பிட்டது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 541,045 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|