ஜுன் 7 இற்குப் பின்னர் பயணத்தடையை நீடிப்பது குறித்து மீளாய்வின் பின்னரே தீர்மானிக்கப்படும – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Sunday, May 30th, 2021

ஜுன் 7ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து உரிய மீளாய்வின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் –

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை ஜுன் 7 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகள் தொடருமான என்பது குறித்து இன்னும் எவுதும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: