ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்!

Saturday, October 29th, 2016

இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் 31ம் திகதி முதல் நவம்பர் மாதம் 3ம் திகதி வரையில் குறித்த இந்த குழு இலங்கையில் தங்கி ஆய்வுகளை நடத்தவுள்ளதாகவும், இந்த வரிச்சலுகையை வழங்குவதற்கு ஏற்புடைய சூழ்நிலை குறித்து ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு செயற்பாடுகளின் முன்னேற்றம், அரசியல் மற்றும் பொருளாதாரத்துறையில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமநிலை ஆகியவை குறித்து இந்த குழு முக்கியமாக அவதானம் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-105

Related posts: