ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை தாமதம்!

Saturday, April 7th, 2018

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை இன்னும் பின்தங்கி இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு குற்றம்சுமத்தியுள்ளது.

குறித்த குற்றச்சாட்டை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் குழுவைச் சேர்ந்த ஆறு பேர், முன்வைத்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அத்தியாவசியமானது. இதன் அடிப்படையிலேயே இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலானவர்த்தகம் மேலோங்கி இருக்கிறது.

இந்த நிலையில், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட உறுமொழிகளை அமுலாக்குவதற்கான வாய்ப்பினை தவறவிடக் கூடாது என்று அந்தகுழு அறிவித்துள்ளது.

குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts: