ஜி. சி. ஈ சாதாரண தர பரீட்சையில் அடைவு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு!

Wednesday, January 10th, 2018

வடக்கு மாகாண பாடசாலைகளில் ஜி. சி. ஈ சாதாரண தரப் பரீட்சையில் அடைவ மட்டத்தை அதிகரிக்க தவணைப் பரீட்சைகளின் புள்ளிகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது என அண்மையில் நடைபெற்ற துறை சார்ந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாண பாடசாலைகளில் ஜி. சி. ஈ சாதாரண தரப் பரீட்சையில் அடைவு மட்டம் திருப்திகரமாக அமைய வேண்டும். ஒரு பாடசாலையில் ஒரு வகுப்பில் ஒரு பாடத்தில் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்தால் மாத்திரமே அது அந்தப் பாடத்துக்கான நூறு வீத சித்தியாகக் கருதப்படும். இதற்காக ஒவ்வொரு மாணவர்களினதும் புள்ளிகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

ஜி. சி. ஈ சாதாரண தரப் பரீட்சை தரம் 10 ஆம் 11 ஆம் தரங்களை உள்ளடக்கியதாகும். தரம் 10 இன் மூன்றாம் தவணை பரீட்சை முடிவுகளும், தரம் 11 இன் முதலாம், இரண்டாம் தவணைப் பரீட்சை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பாட ரீதியாக புள்ளிகள் ஆராயப்பட்டு மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வலயப் பணிப்பாளர் ஊடாக பாடசாலை அதிபருடன் இணைந்து மேலதிக வகுப்புக்கள் மீட்டல் வகுப்புக்கள் போன்றன கடந்த வருடம் முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாட்டின் மூலம் 4 தொடக்கம் 5 வீதம் வரையான முன்னேற்றம் அடைவது இப்போது போதுமானதாக அமையும். அத்துடன் இது தொடர்ச்சியான செயற்றிட்டமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.


283 ஆயுர்வேத வைத்தியர்கள் புதிதாக நியமனம்!
யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் நூல்கள்அன்பளிப்பு!
20வது திருத்தச்  சட்டமூலம் பிற்போடப்பட்டது!
பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் தொழில்துறையை ஊக்குவிப்போம் - ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!
வடக்கில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!