ஜி.சி.ஈ. சாதாரணப் பரீட்சை மாற்றம் ஏதுமின்றி நடக்கும்!

Wednesday, December 6th, 2017

சீரற்ற காலநிலை காரணமாக ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைகளில் எந்த மாற்றங்களும் ஏற்படாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித தெரிவித்தார்.

பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் இவற்றுக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. சாதாரண தரப் பரீட்சை குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும்.

பரீட்சார்திகள் அனைவருக்குமான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை வெள்ள இடர் போன்றவற்றால் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் சேதமடைந்தால் மீண்டும் புதிய அட்டைகள் வழங்கப்படும்.

இன்று நள்ளிரவு தொடக்கம் சாதாரண தரத்துக்காக நடத்தப்படும் தனியார் வகுப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 5 ஆயிரத்து 116 பரீட்சை மைய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

Related posts: