ஜிஎஸ்பி பிளஸ் : இலங்கைக்கான வரிச்சலுகையை மேலும் நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நீடிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இந்த நீடிப்பு 2023ஆம்ஆண்டு வரை அமுலில் இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளதாக ஏற்றுமதி முதலீட்டு மேம்படுத்தல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களும், அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின்போது ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி நிறுத்தி வைத்திருந்தன.
எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
பணிப்புறக்கணிப்பானது கவலையான விடயம் – ஜனாதிபதி.!
தேர்தலை தாமதப்படுத்த சிலர் சூழ்ச்சி – பெப்ரல்!
நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 91 ஆயிரத்த 683 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் வழங்கப்பட்டுள்ளது!
|
|