ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை!

Thursday, December 12th, 2019

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடகி இன்றையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கிலே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் இலங்கை வரவுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், எதிர்வரும் சனிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Related posts: