ஜப்பான் வெளியுறவு ராஜாங்க அமைச்சர் இன்று இலங்கை விஜயம்!

Tuesday, August 28th, 2018

ஜப்பானின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் காசுயுல்சி நகானே இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில் இவரது விஜயம் அமைகிறது.

இவர் இலங்கையில் இரு நாட்கள் தங்கி பிரதமர் மற்றும் அரச தரப்பு அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளதாக ஜப்பானின் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் இரண்டு கண்காணிப்பு படகுகளை வழங்கியுள்ளது. இந்த படகுகள் நாளை ஜப்பானிய ராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளன.

Related posts: