ஜப்பான் நாட்டு கலந்துரையாடலுக்குச் செல்ல யாழ் மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் பதிவு!

Friday, June 8th, 2018

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர் எதிர்வரும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜப்பான் நாட்டில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள சகல மாநகர சபையின் உறுப்பினர்களுக்கும் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலுக்குச் செல்ல விரும்பும் உறுப்பினர்களின் பெயர், விவரங்களைக் கடந்த 4 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் தற்போது சகல கட்சிகளையும் சேர்ந்த 20 உறுப்பினர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலுக்குச் சென்று வருவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே ஜப்பான் நாட்டின் தூதரகம் மேற்கொள்ளும்.

விமானச் சீட்டு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட சகல செலவுகளும் உறுப்பினர்களையே சாரும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: