ஜப்பான் தாய்ஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – மூவரடங்கிய குழுவொன்ரற நியமித்த ஜனாதிபதி உடன் விசாரணைக்கும் உத்தரவு!

Saturday, July 23rd, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசாரணைகள் தொடர்பில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள தாய்ஸ் நிறுவனத்திடம் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் லஞ்சம் கோரியதாக சமூக ஊடகங்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜனி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க, இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற விசேட அதிகாரி எஸ்.எம்.ஜி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவின் விசாரணை அறிக்கை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: