ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் விசேட சந்திப்பு – சலுகை முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராய்வு!

ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த சந்திப்பில் சலுகை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை, இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பானிய தூதுவர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இதன்போது உறுதியளித்துள்ளார்.
Related posts:
யாழ் யமுனா ஏரியில் ஆணின் சடலம் மீட்பு!
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!
வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவி!
|
|