ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – சீனாவுடன் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் யொசிமாசா அயாஷியை சந்தித்துள்ளார்.
முன்பதாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு ஜப்பான் ஹனீடா விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜப்பானிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்றுள்ளனனர். தமது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் அவர் ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதி சடங்கிலும் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, சீனாவுடன் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ள முன்னர் (StratNews Global) இணையத்தளம் ஒன்றுடன் மேற்கொண்ட நேர்காணலின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அந்த கலந்துரையாடலை விரைவில் உயர்மட்ட கலந்துரையாடலாக பரிவர்த்தனை செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|