ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பில்!

Thursday, May 12th, 2016

ஜப்பான் கடற்படைக்குச் சொந்தமான உரகா மற்றும் டக்காஷி மாயா எயாமா ஆகிய பெயர்களைக் கொண்ட இரண்டு கப்பல்கள் இலங்கை வந்தடைந்துள்ளன.

இந்த இரண்டு கப்பல்களும் நேற்று புதன்கிழமை காலை கொழும்புத் துறைமுகத்தைச் வந்தடைந்தன.

இலங்கை கடற்படையின் சம்பிரதாயங்களுக்கு அமைய கொழும்பு சென்றிருக்கும் ஜப்பானிய கடற்படையினருக்கும், உயரதிகாரிகளுக்கும் கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் கடற்படையின் கடலுக்குக் கீழ் கண்ணிவெடிகளை அகற்றும் 51ஆவது பிரிவின் கட்டளைத்தளபதி கப்டன் டொஷிஹிரோ டக்கய்வா, கப்பல் கட்டளைத் தளபதி கொமாண்டர் சுனிச்சிரோ காச்சி மற்றும் லெப்டினன் மசனோரி நகாய் ஆகியோர் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தவை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் நேற்று பகல் நடைபெற்றது.

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் மொடொட்சுகு “ஷிககாவோவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் நேற்றிலிருந்து எதிர்வரும் 14ஆம் திகதிவரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என்று கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் இரு நாட்டு கடற்படையினரிடையே விளையாட்டுப் போட்டிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் இணையதளத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts: