ஜப்பானிடமிருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – வறிய மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பயன்படுத்த நடவடிக்கை!

Friday, May 20th, 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் நோக்கில் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

இதன்படி, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இந்த நிதியானது ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தினால் குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு உதவி வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 15,000 நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கும் 380 000 பாடசாலை மாணவர்களுக்கும், மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: