ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பாகிஸ்தான் அரச தலைவர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பு!

Friday, February 26th, 2021

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கான், தனது ருவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்ரான் கான், இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டபோது, இலங்கை ஜனாதிபதி மற்றும் அரச அதிகாரிகளுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் நல்லுறவுடன் பயணிப்பது தொடர்பான அனுகுமுறைகள் குறித்தும் விவாதித்துள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் இவ்விடயம் தொடர்பாக தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வு மேலும் வலுவடைவதற்கு இந்த விடயம் ஏற்புடையதாக அமைந்துள்ளது.

அந்தவகையில் இவ்விடயத்துத்துக்கு இலங்கையின் தலைமைக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவிக்கிறது’ என ருவிட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் பெரும் இழுபறி நிலையில் இருந்து வந்தது.

நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் உட்பட முஸ்லிம் மற்றும் ஏனைய இன சகோதரர்களாலும் இதற்கு குரல் கொடுக்கப்பட்டுடு வந்தது.

இந்நிலையில் சுகாதார தொழில் நுட்பக்கழுவின் பரிந்துரைக்கமைய இலங்கை அரசு ஜனாசா நல்லடக்கத்திற்கு நேற்றையதினம் (25) அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: