ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

தம்மை கொலை செய்யும் திட்டத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் அது அரசியல் காரணமாக மறைக்கப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாகவும் இதுவே மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கான காரணம் என்று அவர் நேற்று இரவு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தம்மை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட விடயத்துக்கு பின்னால் மற்றும் ஒரு முக்கியஸ்தரின் பெயர் உள்ளதென்று குறிப்பிட்ட அவர், விசாரணைகள் முடிவடையாத காரணத்தினால் அதனை வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.
அந்தப் பெயரை தெரிந்துக் கொண்டால் மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்றும் மைத்திரி தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக ரணில் ஜெயவர்தன நியமனம்!
தொடர் மழை: இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு!
அரச ஊடகங்களின் பணிப்பாளர் சபையில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்க நடவடிக்கை - அமைச்சர் டலஸ் அழகப்பெ...
|
|