ஜனாதிபதி வாழ்த்து!

Sunday, July 31st, 2016

இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கண்டி பல்லேகலே மைதானத்தில் நேற்றைய தினம் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியீட்டியது. இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மத்யூஸிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளடன் அவர், எதிர்வரும் காலங்களில் வெற்றியீட்டவும் தனது ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் மற்றும் சிறப்பாக பந்து வீசிய ரங்கன ஹேரத் ஆகியோரையும் ஜனாதிபதி இலங்கை அணித் தலைவரிடம் பாராட்டிப் பேசியுள்ளார்.

இதேவேளை 17 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியொன்றை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: