ஜனாதிபதி – வடக்கின் முதல்வர் சந்திப்ப ஒத்திவைப்பு!

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவிற்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் பிற்போடப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டத்தை திருத்த சுகாதார அமைச்சு தீர்மானம்
குப்பைக்கூளங்களை அகற்றுவது தொடர்பில் பிரதமர் கருத்து!
உலகில் அதிகளவு தேங்காய்களை வீண்விரயம் செய்யும் நாடாக இலங்கை - விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் ...
|
|