ஜனாதிபதி ரணில் உத்தரவு – வடக்கில் படையினர் வசமிருந்த 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு!
Thursday, February 2nd, 2023வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்படவுள்ள காணிகள் 197 குடும்பங்களுக்கு நாளை (3) பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படவுள்ளது.
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இந்தக் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
காங்கேசன்துறை – கோட்டை பயணத்திற்கு உத்தர தேவி!
ICC இனது கட்டாய ஊடக சந்திப்பினை புறக்கணித்தது இலங்கை அணி!
பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
|
|