ஜனாதிபதி ரணில் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பு!
Friday, September 22nd, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நியூயோர்க்கில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இடம்பெற்ற சிறு உரையாடலுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பைடன் தம்பதிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயணிகள் போக்குவரத்துக்கான சேவை இடைநிறுத்தம் - போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர!
தன்னிறைவடைந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன...
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே நோக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
|
|