ஜனாதிபதி யோசனை – பிரத்தியேக தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, November 16th, 2021

பிரத்தியேக தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச நிறுவனங்கள், வங்கிகள், தொலைபேசி வசதிகளை வழங்குவோர் மற்றும் மருத்துவ மனைகள் போன்ற நிறுவனங்களால் பிரத்தியேக தகவல்களைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தும் போது குறித்த தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்குரிய ஏற்பாடுகளை வகுப்பதற்காகவும் பிரத்தியேக தரவுகள் பாதுகாப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: