ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யா விஜயம்!

எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பினை ஏற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கைக்கு நன்மை ஏற்படக்கூடிய சில முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் டொக்டர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதோடு; அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்கின்றது எனவும், ஏனைய சிறுபோக உற்பத்திகளும் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தின் ஊடாக உச்ச அளவில் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் முனைப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக தூதுவர் சமன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|