ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை இருநாடுகளின் உறவை பலப்படுத்தியுள்ளது – மலேஷிய பிரதமர்  !

Saturday, December 17th, 2016

இலங்கையும் மலேஷியாவும் வர்த்தக ரீதியில் சிறந்த நட்பு நாடுகள்.  இலங்கை ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் மூலம் அந்த தொடர்பு மேலும் அதிகரிக்கும். மலேஷியா இலங்கையில் தொலைத் தொடர்புதுறையில் பாரிய முதலீடுகளை முன்னெடுத்துள்ளது   என்று மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை  மேற்கொண்டு மலேஷியா  வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்  இன்று கோலாலம்பூரில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை  நடத்தும்போது கருத்து வெளியிடுகையிலேயே அந்நாட்டு பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மலேஷியாவுக்கு உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இலங்கைக்கும் மலேஷியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு முக்கியமானது. வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தவேண்டும் என்றார்.

s1

Related posts: