ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருது!
Wednesday, December 14th, 2016சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்காக வழங்கியுள்ள பங்களிப்பை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு விருது வழங்குவதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்பொன்றினூடாக ஜனாதிபதிக்கு இந்த விருதை வழங்க இருப்பதாக அந்த வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் அசேல இத்தவல கூறினார்.
இதேவேளை பெளத்த தர்மத்தின் தத்துவங்கள் நடைமுறை வாழ்க்கையில் அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அதுவே சமூகத்தில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று ஜனாதிபதி கூறினார்.
நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
Related posts:
அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்களுக்குப் பணித் தடை - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!
அரிசி தேங்காய் போன்று உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது – நிதிய அமைச்ச...
இலங்கை பணியாளர்களுக்கு விவசாயத்துறையில் தொழில் வாய்ப்பு - ஜப்பான் இணக்கம் என இலங்கை வெளிநாட்டு வேலை ...
|
|