ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று பிறந்தநாள்!

தனது 65வது பிறந்தநாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொண்டாடுகின்றார். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி கம்பஹா யாகொடவில் பிறந்த மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் குடியேற்றத்திட்டத்தின் ஊடாக அவரது குடும்பத்துக்குக் காணித்துண்டொன்று கிடைத்த நிலையில், சிறு வயதிலேயே பொலன்னறுவைக்கு இடம்பெயர்ந்திருந்தார்.
கம்யூனிச சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன தனது 17வது வயதில் சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். சுதந்திரக் கட்சிக்குள் அவரை அழைத்து வந்த அன்றைய பொலன்னறுவை நாடாளுமன்ற உறுப்பினர் லீலாரத்ன விஜேசிங்க, பொலன்னறுவை மாவட்ட சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பின் செயலாளராக மைத்திரியை நியமனம் செய்திருந்தார்.
அதன் பின்னர் அனுர பண்டாரநாயக்க போன்றோருடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அரசியலில் பயணத்தை ஆரம்பித்த மைத்திரிபால சிறிசேன தற்போது இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்துக் கொண்டிருக்கின்றார். இன்றைய தினம் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பில் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத வழிபாட்டு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|