ஜனாதிபதி முறைமை, அரசியலமைப்பு மாற்றம் குறித்து கிராமங்கள்தோறும் சென்று கலந்துரையாடல்கள் – காமினி வியாங்கொட

Wednesday, April 12th, 2017

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்வரும் காலங்களில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை அகற்றவும், அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து தெளிவுபடுத்தவும், கிராமங்கள்தோறும் சென்று கலந்துரையாடல்களை துரிதப் படுத்தப்போவதாகவும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதியான காமினி வியாங்கொட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த புதனன்று காமினி வியங்கொடவுடன் பேராசிரியர் சரத் வீரசூரியவும், ராவய பத்திரிகையின் செய்தி ஆசிரியரான ஜனரஞ்சனவும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவைச் சந்தித்தபோது, அவர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை அகற்றுவது தொடர்பான தமது நிலைப்பாட்டில் தாம் உறுதியாக உள்ளதாக தம்மிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக வியாங்கொட ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இது இப்படியிருக்க 2020 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்றும் அமைச்சர்களான மகிந்த அமரவீர, எஸ். புp திஸ்ஸநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: