ஜனாதிபதி மாளிகையின் சேதம் – திருட்டு விபரங்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிப்பு!

Saturday, August 13th, 2022

ஜனாதிபதி மாளிகையில், சேதமாக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட பொருட்கள் தொடர்பான பட்டியலை வழங்குமாறு, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்கவினால், ஜனாதிபதியின் செயலாளருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண உதவி தொல்லியல் ஆணையாளர் சியாமளா ராஜபக்ஷவின் தலைமையில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, ஜனாதிபதி மாளிகையில் உள்ள பொருட்கள் தொடர்பான பட்டியலையத் தாயரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

ஜனாதிபதி மாளிகையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, அங்குள்ள பொருட்கள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

தற்போது வரையில், 75 வீதமான பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் இன்னும் சீராகவில்லை : ஊரடங்குச் சட்டம் தொடரவேண்டும் - அரச மருத்துவ அதிகாரி...
காணி, நிதி பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் நியாயாதிக்க சபை - எடுக்கப்பட்டதாக நீதி அமை...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலா? – தென்னிலங்கை அரசியல் களத்தில் பரபரப்பு!