ஜனாதிபதி மக்களுக்கு நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை தெரிவித்திருக்கவில்லை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, June 27th, 2021

அரசாங்கத்தை ஆதாரங்கள் இன்றி விமர்சித்தவர்களிற்கு ஜனாதிபதி தனது  உரையின் மூலம் பதிலை வழங்கியுள்ளார் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதேநேரம் உள்நோக்கம் கொண்ட சக்திகள் ஜனாதிபதியின் உரையை கண்டிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாட்டிற்கு உண்மையை  தெரிவித்துள்ளார், அரசாங்கம் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்த முடியாத விடயங்கள் எதிர்காலத்தில் செய்யவேண்டிய விடயங்கள் குறித்து அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டு;ள்ளார்.

மேலும் ஜனாதிபதி தனது உரையில் நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை தெரிவிக்கவில்லை. ஆனால் அவ்வாறான விடயங்களை எதிர்பார்த்தவர்கள் ஜனாதிபதியை விமர்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: