ஜனாதிபதி போட்டியாளர்கள் சொத்துக்களை பகிரங்கப்படுத்த வேண்டும் – இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வலியுறுத்து!

Tuesday, July 19th, 2022

நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை 20 ஆம் திகதி நடைபெறவுள்ள முக்கியமான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை பகிரங்கப்படுத்தவேண்டும் என்று இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் கோரியுள்ளது.

ஊழல் தலைவர்களை இனியும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான செய்தியை இலங்கையர்கள் வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் இலங்கையின் குடிமக்களுக்கு தங்கள் சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்கவும் வெளிப்படைத்தன்மைக்கான தனிப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதும் அவசியம் என்று இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் நீண்டகாலம் அங்கம் வகிக்கும் தற்போதைய வேட்பாளர்கள் மக்கள் தங்கள் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்த புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துகளின் பொது அறிவிப்பு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் மக்களுக்கு அவர்களின் உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்றும் இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: