ஜனாதிபதி, பிரதமர் நாட்டில் இல்லாத வரலாற்றுச் சம்பவம் இலங்கையில் பதிவு – நாட்டின் தற்காலிக தலைவரானார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

Saturday, September 18th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தற்காலிகமாக செயற்படவுள்ளார்.

அதன்படி, ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என்பதும் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளார்.

இதற்கிடையே, கடந்த வாரம் இத்தாலியில் ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (19) அல்லது திங்கட்கிழமை (20) நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையிலேயே நாட்டின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: